கருப்புசாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை இறந்தது

கரையூரான் கருப்புசாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை இறந்தது.

Update: 2022-01-09 18:55 GMT
தோகைமலை, 
தோகைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை ஊராட்சி கரையூரான் நீலமேகம், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த காளைக்கு கரையோர நீலமேக கருப்பு காளை என்று பக்தர்கள் அழைத்து வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட காளை நேற்று காலை திடீரென்று இறந்தது. இதையொட்டி கிராம மக்கள் புத்தாடை, மாலைகள் கொண்டு வந்து கண்ணீர் மல்ல ஒப்பாரி பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கரையூரான் கோவில் அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்தனர். 

மேலும் செய்திகள்