விஷம் குடித்து தொழிலாளி சாவு
நெல்லை அருகே விஷம் குடித்து தொழிலாளி பரிதாபமாப இறந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 39) கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பா நேற்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.