கரூரில் 32 பேருக்கு கொரோனா
கரூரில் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கரூர்,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி 5 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த வாரத்தில் 8 பேர், 10 பேர் என்ற அளவில் பாதிப்பு இருந்தது. நேற்று முன்தினம் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பு நேற்று முன்தினத்தை விட இருமடங்கு அதிகரித்து இருந்தது. ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.