5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
காளையார்கோவில் கொலை வழக்கில் சிக்கிய 5 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
சிவகங்கை,
காளையார்கோவில் கொலை வழக்கில் சிக்கிய 5 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
கொலை வழக்கில் 5 பேர் கைது
காளையார்கோவிலை அடுத்துள்ள பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாத்துரை சேர்ந்த ஊர்க்காவலன் (வயது 27), சிவகங்கை அடுத்த முத்துப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் ராஜா (22) முத்துராஜா (22) சிவகங்கை அடுத்த காஞ்சிரங்காலை சேர்ந்த பிரவீன் (21) மானாமதுரை சேர்ந்த விஜய் (22) ஆகிய 5 பேரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
கைதான 5 பேரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது
எனவே இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும் போது, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் பழிக்குப்பழியாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.