விழுப்புரம் அருகே பிளஸ்-1 மாணவி பலாத்காரம் முதியவர் உள்பட 3 பேர் கைது
விழுப்புரம் அருகே பிளஸ்-1 மாணாவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
செஞ்சி,
விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் தாய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன்பின்னர், சிறுமி புதுச்சேரியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்து, முட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வந்த சிறுமி, அவரது பெரியம்மாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
4 மாதம் கர்ப்பம்
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி உறவினர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, விழுப்புரம் அருகே உள்ள ஈச்சங்குப்பத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் (வயது 81), ராஜாமணி மகன் இளையராஜா (28), மற்றும் சிறுமிக்கு அண்ணன் முறையில் உள்ள மோகன் (வயது 32) ஆகியோர் தன்னை தனித்தனியாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மண்ணாங்கட்டி, இளையராஜா, மோகன் ஆகியோரை கைது செய்தனர்.