மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.

Update: 2022-01-09 17:31 GMT
புதுக்கோட்டை:
ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு கடந்த ஓரிரு நாட்களாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் வரை தொற்று பாதிப்பு 10-க்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 2 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 965 ஆக உயர்ந்தது.
பாதிப்பு அதிகரிப்பு
மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், அரசின் வழிகாட்டு முறைகளையும் முறையாக பின்பற்ற அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்