கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-09 16:55 GMT
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் ராதா (வயது 56). இவர் கிருஷ்ணகிரிக்கு வந்திருந்தார். அங்கு ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் பஸ் நிறுத்தத்தில் பையில் 3 பவுன் தங்க சங்கிலியுடன் நின்று இருந்தார். அப்போது அருகில் வந்த 2 பெண்கள் ராதா வைத்திருந்த பையை அபேஸ் செய்து கொண்டு தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஊத்தங்கரை தாலுகா குட்டனூரை சேர்ந்த மங்கா (45), திருப்பத்தூர் சகாதேவன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சசிகலா (36) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்