மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான தேர்வை 60 பேர் எழுதினர்

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான தேர்வை 60 பேர் எழுதினர்;

Update: 2022-01-09 16:33 GMT
கோவை

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு, பிளஸ்-2 முடித்தவர்கள் விண்ணப்பித்தனர்.  இந்த தேர்வு, பணியாளர் தேர்வாணையம் சார்பில்(எஸ்.எஸ்.சி.) கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக முழு ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த தேர்விற்காக காலை 8 மணிக்கு ரெயில் நிலையத்தில் இருந்து காந்திபுரம் வழியாக சிறப்பு பஸ் இயக்கப்பட்டது‌. இதன் மூலம் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சிரமமின்றி சென்றனர். 

காலை 11 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணிக்கு முடிந்தது. இதையடுத்து 12.30 மணிக்கு மீண்டும் பஸ் மூலம் காந்திபுரம், ரெயில் நிலையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேர்வர்கள் சென்றனர். இதுகுறித்து தேர்வு மைய அதிகாரி கூறுகையில், இந்த தேர்வில் கலந்துகொள்ள 91 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 31 பேர் வரவில்லை. இதனால் 60 பேர் மட்டும் தேர்வு எழுதினர். இன்று (நேற்று) நடக்கவிருந்த டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் துறை தேர்வு தள்ளி வைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது என்றார்.

மேலும் செய்திகள்