கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-09 16:32 GMT
போத்தனூர்

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செருப்பு மாலை

கோவை வெள்ளலூர் பஸ் நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலையில் அந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவிப்பொடியை தூவினர்.

மேலும் அந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். இதை நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்ட னர். அவர்கள், பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விசாரணை

இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இது குறித்து போலீசார் கூறும் போது, சிலை அவமதிப்பில் தொடர்பு உடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது குறித்து கு.ராமகிருட்டிணன் கூறுகையில், பெரியாரின் கொள்கை களை தி.மு.க. ஆட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பெரி யார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பின்னணி குறித்து முழுமையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்