திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Update: 2022-01-09 16:22 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் செங்கணாங்கொல்லை, சோழபாண்டியபுரம், கோவலூர் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது 100 சதவீத தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் வகையில் சுகாதாரத்துறையினரின் பணி இருக்க வேண்டும் எனவும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் முக்கியம் எனவும் கூறினார். அப்போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, திருக்கோவிலூர் தாசில்தார் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, செங்கணாங்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் செல்விகோபி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்