கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது.;

Update: 2022-01-09 16:16 GMT
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலசந்தி, திருப்பள்ளிஎழுச்சி பூஜைகள் நடந்தது. அதன்பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. 
அதனைத்தொடர்ந்து பலிபீடம் மற்றும் கொடிமரத்திற்கு பால், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிர் ஆகிய சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்