சாலைகள் வெறிச்சோடின கடைகள் அடைப்பு

சாலைகள் வெறிச்சோடின கடைகள் அடைப்பு

Update: 2022-01-09 16:01 GMT
சாலைகள் வெறிச்சோடின; கடைகள் அடைப்பு
பொள்ளாச்சி


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இதனிடையே ஒமைக்ரான் வைரசும் பொதுமக்களைஅச்சுறுத்துகிறது.இந்நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.ஞாயிற்றுக்கிழமை நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன்படி பொள்ளாச்சி பகுதியில் நேற்று காய்கறி, மளிகை கடைகள், ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகள்மூடப்பட்டிருந்தன. பால் விற்பனை நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மெடிக்கல் உள்ளிட்ட அத்தியவாசிய சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன. பஸ்கள் ஓடவில்லை, அத்தியாவசியபொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஒட்டலில்பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டிருந்தது. 

வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை தான் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் விடுமுறை நாள் மேலும் வால்பாறையின் சந்தை நாளும் ஞாயிற்றுக்கிழமை தான் வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையில் வியாபாரங்கள் அதிகளவில் நடைபெறும்.எனவே இந்த ஊரடங்கால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்