2 பெண்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கீழ்வேளூர் பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது குணடர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-01-09 15:11 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது குணடர் சட்டம் பாய்ந்தது.
சாராய வியாபாரிகள்
கீழ்வேளூர் அருகே தெற்காலத்தூர் காலனி தெருவை சேர்ந்த தங்கையன் மனைவி சாரதா (வயது66). தேவூர் ராதாமங்கலம் நடுத்தெருவை சேர்ந்த கொல்லக்காட்டு குமார் மனைவி பூங்கொடி (45), சங்கமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த கந்தன் (42). சிக்கல் பனைமேடு மெயின் ரோட்டை சேர்ந்த வேலாயுதம் மகன் ரஞ்சித் (34). சாராய வியாபாரிகளான  இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை  தொடர்பாக வழக்குகள் உள்ளன.
சாராயம் விற்றதாக சாரதா, பூங்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டு,திரூவாரூர் மகளிர் சிறையிலும், கந்தன், ரஞ்சித் ஆகியோர் நாகை மாவட்ட சிறையில் உள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த நிலையில் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 
இதை தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் சாரதா, பூங்கொடி, கந்தன், ரஞ்சித் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கீழ்வேளூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்