கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
துடியலூர்
கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக வாலிபர் உயிர் தப்பினார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவர்கள்
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது 17), விஜயகிருஷ்ணன் (18) மற்றும் ஸ்ரீகாந்த் (18). இதில் விஜயகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தனர். மணிகண்டன் வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 7.30 மணியளவில் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் சொல்போனை பார்த்தவாறு சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த ரெயில் என்ஜின் ஒன்று எதிர்பாராதவிதமாக மணிகண்டன், விஜயகிருஷ்ணன் ஆகியோர் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் ரெயில் என்ஜினை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவில் ரெயில் என்ஜினில் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.