163 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

ரூ.10¾ கோடி மதிப்பில் 163 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update:2022-01-09 02:05 IST
மதுரை, 
ரூ.10¾ கோடி மதிப்பில் 163 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
காதுகேட்கும் கருவி
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கினர். மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் சார்பில் இதுவரை ரூ.10 கோடியே 72 லட்சத்து 47 ஆயிரம் செலவில் 163 குழந்தைகளுக்கு செயற்கை காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 
இவை அனைத்தும், அரசின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக பொருத்தப்பட்டு உள்ளது. 
இந்த 163 குழந்தைகளும் பிறவியிலேயே காதுகேட்காத வாய் பேசமுடியாதவர்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளித்ததன் மூலம் அவர்கள் தற்போது மற்ற குழந்தைகள்போல் நலமுடன் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்திய காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து துறையினருக்கும் பாராட்டுதலை தெரிவிக்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.4 லட்சத்தில் கருவி
துறை தலைவர் தினகரன் கூறுகையில், "காப்பீடு திட்டத்தின் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.6.35 லட்சம் வழங்கப் படுகிறது. அதில், அவர்களுக்கு பொருத்தப்படும் செயற்கை காது கேட்கும் கருவியின் மதிப்பு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் ஆகும். ஒரு வருடத்திற்கு அந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து பேச்சாற்றல் உள்ளிட்ட பல்வேறு பயற்சிகள் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் மற்ற குழந்தைகள் போல மாற முடியும். 
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகள் அனை வருக்கும் பிறவியிலேயே காது கேளாமை உள்ளிட்ட பிரச்சி னைகள் இருக்கிறதா என்பது குறித்த சோதனை செய்யப் படுகிறது. பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் 3 முதல் 6 பேருக்கு பிறவியிலேயே காது, வாய் பேசமுடியாத பிரச்சினை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் விஜய ராகவன், மருத்துவ கல்லூரி பேராசிரியர் அருள் சுந்தரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்