மதுரையில் ஒரே நாளில் 314 பேருக்கு கொரோனா

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நேற்று 314 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-08 20:25 GMT
மதுரை,
மதுரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நேற்று 314 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 10,978 பேர் பாதிக்கப்பட்டனர். மதுரையிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் நேற்று 7 ஆயிரத்து 720 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோத னையில் 314 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 
இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மதுரையில் கொரோனா பாதிப்பால் 30-க்கும் குறைவான நபர்களே சிகிச்சையில் இருந்தனர். ஆனால் கடந்த 6 தினங்களில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர்.
தடுப்பூசி முக்கியம்
இதுகுறித்து மருத்துவத் துறையினர் கூறுகையில், "கொரோ னாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அந்தக் கட்டுப்பாடுகளை சரிவரக் கடைப் பிடித்தால் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். முடிந்த வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு வந்தாலும் பெரிய அளவில் அவர்களின் உடல் உறுப்புகளை பாதிப்பதில்லை. 
எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா 2-வது அலையில் கூட ஒவ்வொரு நாளும் எவ்வளவு பாதிப்பு வரும் என உத்தேசமாக கணிக்க முடிந்தது. ஆனால் மதுரை மட்டுமின்றி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எந்த விகிதத்தில் அதிகரிக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. எனவே தான் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றனர்.

மேலும் செய்திகள்