பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வயல்நண்டு-நத்தைகள் விற்பனை

பட்டுக்கோட்டையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வயல்நண்டுகள்- நத்தைகள் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-01-08 19:53 GMT
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வயல்நண்டுகள்- நத்தைகள் விற்பனை செய்யப்படுகிறது.  
நத்தைகள் விற்பனை 
பொதுமக்கள் இயற்கையை கைவிட்டு செயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் உணவுப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பட்டுக்கோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் நத்தைகள் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நத்தை கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. கூறு கட்டி வைக்கப்பட்ட நத்தைகள் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
ஏரி, குளங்களின் கரையோரங்களில் ஒதுங்கும் நத்தைகளை சேகரித்து வரும் விவசாய தொழிலாளர்கள் அதனை சுத்தம் செய்து கூறுகளாக கட்டி விற்பனை செய்து வருகின்றனர். 
மூலநோய்க்கு அருமருந்து
நத்தை இறைச்சி உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் ஆற்றல் உள்ளது. நீர்நிலைகளில் கரையில் ஒதுங்கும் நத்தைகளை அதிகாலை நேரங்களில் சேகரித்து  விற்பனை செய்து வருகிறோம். இந்த பகுதியில் அதிக அளவில் நத்தைகள் கிடைக்கிறது. 
நத்தை ஓட்டை நீக்கி உள்ளே இருக்கும் இறைச்சியை சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுவதால் மூலநோய்க்கு அருமருந்தாக அமைகிறது என்று நத்தை வியாபாரி காந்தி தெரிவித்தார். 
ஆரோக்கியம் மேம்படும்
மேலும் 20 வயல் நண்டுகள் அடங்கிய பை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி செல்வோர் அதனை இடித்து ரசம் வைத்து சாப்பிடுவதால் பனிக்காலம், மழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.  இதுபோன்று இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி உண்பதால் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. 
இயற்கையாக கிடைக்கும் நண்டு மற்றும் நத்தை கறிகளை பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்