மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மண்டியிட்டு போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மண்டியிட்டு போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2022-01-08 19:44 GMT
சேலம், ஜன.9-
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மண்டியிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
டாஸ்மாக் மதுக்கடை
சேலம் மெய்யனூர் இட்டேரி ரோட்டில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இட்ேடரி ரோட்டில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வடக்கு மாநகர குழு உறுப்பினர் குருபிரசன்னா தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது சிலர் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். 
தடுத்து நிறுத்துவோம்
இதையொட்டி அங்கு பள்ளப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க விடமாட்டோம் என்றும், அதையும் தாண்டி மதுபாட்டில்களை வந்து கொண்டு இறக்கினால் தடுத்து நிறுத்துவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்