வேன் மோதி சிறுவன் பலி

வேன் மோதி சிறுவன் பலியானான்.;

Update: 2022-01-08 19:41 GMT
அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே பாரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் நேயன்மாறன் (வயது3). இந்த சிறுவன் நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்து ரோட்டின் ஓரமாக நடந்து சென்றுள்ளான். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நேயன் மாறன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டான். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். இந்த சம்பவம் தொடர்பாக பாலமேடு போலீசார், வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்