‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-01-08 19:24 GMT
வெளியேறும் கழிவுநீர் 
மதுரை முனிச்சாலை ஓலைபட்டினம் 1, 2-வது தெரு சாலை சந்திப்பில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் கசிந்து வெளியேறி வருகிறது. கசிந்து வரும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சாக்கடை மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, மதுரை.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா சேந்தநதி கிராமம் முக்குளம் முதல் சேந்தநதி வரை உள்ள சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பயணிப்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ராஜா, திருச்சுழி.
பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பஞ்சாயத்து கோவிந்த நல்லூர் கிராமத்தில் போதிய பஸ்வசதி இல்லை. வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் நடந்தே சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.
பொதுமக்கள், கோவிந்தநல்லூர். 
ஆபத்தான மின்கம்பம்
மதுைர மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடில் பகுதியில் உள்ள வயல்ெவளி பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் வயல்களுக்கு செல்லும் விவசயிகள் அச்சத்துடன் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.
சரண்ராஜ், திருமங்கலம்.
கொசுத்தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் தெற்குெதருவில் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் மூலம் ெகாசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வெள்ளையன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
சாக்கடை கால்வாயில் குப்பை
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சின்னதுரைக்குளத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி  நிற்கின்றது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடாக உள்ளது. ேமலும் துர்நாற்றமும் வீசுகின்றது. பொதுமக்களின் நலன்கருதி இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மேலூர்.

மேலும் செய்திகள்