வாடிவாசல், தடுப்புவேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

திருவெறும்பூர், ஜன.9-
தமிழர் திருநாளாம் ெபாங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி அருகே திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரியூரில் உள்ள பெரியசூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசிப்பார்கள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாடிவாசல், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.