ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-01-08 19:08 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் தங்க ராஜா (வயது 13). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை ஊருக்கு அருகில் உள்ள சிற்றாற்றுக்கு சென்ற தங்க ராஜா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுடலையாண்டி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வந்து பொதுமக்களுடன் இணைந்து காணாமல் போன தங்க ராஜாவை தேடினர். அப்போது தங்க ராஜா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

நீரில் மூழ்கி சாவு

பின்னர் தங்க ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், தங்க ராஜாவுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும், சிற்றாறு அருகே செல்லும்போது வலிப்பு வந்ததால் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. 

ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்