போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நாங்குநேரி பகுதியில் சுமார் 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதை அறிந்த நாங்குநேரி யூனியன் மகளிர் ஊர் நல அலுவலர் பேச்சியம்மாள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது, கடந்த 2-ந் தேதி சுரேஷ் (வயது 25) என்பவர் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பேச்சியம்மாள் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தார்.