இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டையில் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-08 18:55 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. 

இதையொட்டி அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளை அருகில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.இதனை கண்டித்து இந்து முன்னணி மாநிலச்செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் பள்ளிக்கூடத்துக்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இங்குள்ள மாணவிகளை அந்த பள்ளிக்கூடத்துக்கு மாற்றக்கூடாது. வேண்டுமானால் அந்தப்பள்ளிக்கூடத்தை பாதுகாப்பு மையமாக மாற்றலாம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பள்ளி மைதானத்தில் தடுப்பு வேலி அமைத்து மற்றொரு பகுதியில் வாசல் அமைத்து மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்