விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் மீட்பு வாலிபர் கைது
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் விபசாரத்தில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் விபசாரத்தில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
லாட்ஜில் விபசாரம்
கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் அரை நிர்வாண நிலையில் தப்பி ஓடி விட்டனர். மற்றொரு அறையில் சோதனை செய்த போது ஒரு வாலிபர் மற்றும் 3 இளம்பெண்கள் அரைகுறை ஆடையில் இருந்தனர்.
வாலிபர் கைது
பின்னர் போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபர், செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 32) என்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
போலீசிடம் சிக்கிய 3 இளம்பெண்களில் 2 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
புரோக்கர் மூலம் இவர்கள் 3 பேரும் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த விபசாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----