தாயில்பட்டி
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சியை சேர்ந்த அன்னபூரணியாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் தனியார் மதுபான கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியதில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தனியார் மதுபான கடைக்குள் நுழைந்து மதுபாட்டில்களை உடைத்தனர். மேலும் அலுவலர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், டேபிள் சேர்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து தனியார் மதுபான கடையின் மேலாளர் ராஜா முனிசாமி (வயது 32) வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி ஆகியோர் காளிராஜ், செவல்பட்டி ராமமூர்த்தி, வைர குட்டி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.