விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு போட்டிகள்

Update: 2022-01-08 18:50 GMT
விருதுநகர்
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் மன்றங்களுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. காரியாபட்டி மற்றும் விருதுநகர் யூனியன் பகுதியில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் நலன் அதிகாரி ஞானச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், முத்திருளப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கபடி, கால்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பழனிவேல் வரவேற்று பேசினார். முடிவில் ராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்