பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்டு, அந்த பெண்ணுடன் லாட்ஜில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-01-08 18:15 GMT
குன்னத்தூர்
கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்டு, அந்த பெண்ணுடன் லாட்ஜில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தம்பதி
 தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய 35 வயது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், 28 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் வாலிபருடனான பழக்கத்தை அந்த பெண் கைவிடவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற பெண் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த தொழிலாளி தனது மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் பயந்துபோன தொழிலாளி தனது மனைவி வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தார். அவர்களும் அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளி தனது மனைவிக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என்ற பயத்தில் தனது மனைவியை காணவில்லை என்று குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர்.
லாட்ஜியில் போலீஸ் ஏட்டு
இந்த  புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டி அந்த பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டார். ஒரு கட்டத்தில் செல்போனை எடுத்து அந்த பெண் பேசினார். அப்போது அந்த பெண் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து முத்துப்பாண்டி அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்றார். அப்போது அந்த பெண் ஒரு வாலிபருடன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கள்ளக்காதலனுடன் அந்த பெண் ஓடிவந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த பெண்ணை மீட்டு கணவருடன் ஒப்படைக்க அழைத்து வந்தார். ஆனால் அந்த பெண்ணை கணவரிடம் ஒப்படைக்காமல், அந்த பெண்ணை திருப்பூரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் ஒருநாள் முழுவதும் போலீஸ் ஏட்டு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 
பணியிடை நீக்கம்
இதற்கிடையில் அந்த பெண் லாட்ஜியில் இருந்து வெளியே வந்து நேராக போலீஸ் நிலையம் சென்று போலீஸ் ஏட்டு தன்னுடன் இருந்த  விபரத்தை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட சூப்பிரண்டு சசாங் சாய் விசாரித்து போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.கள்ளக்காதலனுடன் ஓடியபெண்ணை மீட்க சென்ற போலீஸ் ஏட்டு, அந்த பெண்ணை அழைத்து சென்று லாட்ஜியில் தங்க வைத்து விடியவிடிய அவருடன் தங்கி இருந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்