வீட்டில் பதுக்கிய 49 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் வீட்டில் பதுக்கிய 49 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-08 18:04 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை பே கோபுரத்தெருவில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பவர் வீட்டில் தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு ரூ.51 ஆயிரத்து 354 மதிப்புள்ள 49 கிலோ 350 கிராம் எடை கொண்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்