2 ஆசிரியைகளுக்கு கொரோனா

ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2022-01-08 18:03 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் பணிபுரியும் 103 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 2 ஆசிரியைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஒரு ஆசிரியை செய்யாறு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு ஆசிரியை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். 

மேலும் செய்திகள்