அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 10 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2022-01-08 17:59 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் அருகே எம்.புதூரில் உள்ள கருப்பர் கோவில் அருகில் நேற்று காலை 11 மணியளவில் பல்வேறு கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டது. இதை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை பிடித்தனர். இதில் மாடுகளை பிடித்த இளைஞர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமானவர்கள் பொட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றியும், கொரோனா தொற்று நோய் தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக வடமாவளி குரூப் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா திருக்ேகாஷ்டியூர் போலீசில் புகார் செய்தார்.

10 பேர் மீது வழக்கு

இந்த புகாரின் பேரில், எம்.புதூரைச்சேர்ந்த சவுமிய மூர்த்தி (வயது 65), பெருமாள் (73), சுப்பிரமணியன் (61), பிரசாந்த் (28), வைரவன் (50) ஆகிய 5 பேரும் மீதும், இதே போன்று திருப்பத்தூர் அருகே கொங்கரத்தி கிராமத்தில் ஸ்ரீவன்புகழ் நாராயணன் கோவில் அருகில் 50-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளைக் கொண்டு அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக வெளியாத்தூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர், சுப்பிரமணியன் (பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில், கொங்கரத்தியைச்சேர்ந்த ராமச்சந்திரன் (57), குமார் (67), லெட்சுமணன் (75), வைரவன் (32), சுந்தரம் (67) ஆகிய 5 பேர் மீதும் திருக்கோஷ்டியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

மேலும் செய்திகள்