ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
கீழக்கரை பகுதியில் ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கீழக்கரை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கீழக்கரை, திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? என மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் அங்கையர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.