திண்டிவனத்தில் மாணவியை இரண்டாவது முறையாக கடத்திய சிறுவன் மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

திண்டிவனத்தில் மாணவியை இரண்டாவது முறையாக கடத்திய சிறுவன் மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-08 17:07 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த சிறுமியை தி்ணடிவனம் பூந்தோட்டம் பகுதி கசாமியன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், காதலிப்பதாகக்கூறி, அவரை கடத்தி சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

 இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி இதே சிறுமியை அந்த சிறுவன் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றுவிட்டார். அப்போது போக்சோ வழக்கில் சிறுவனை கைது செய்து, சிறுமியை போலீசார் மீட்டனர். 

அதன் பின்னர் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன், ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில் 2-வது முறையாக அந்த சிறுமியை கடத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

மேலும் செய்திகள்