தூத்துக்குடியில் 202 பேருக்கு கொரோனா

தூத்துக்குடிமாவட்டத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update: 2022-01-08 16:46 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 34 பேர் உள்பட இதுவரை 56 ஆயிரத்து 245 குணமடைந்துள்ளனர். 770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 412 பேர் இறந்துள்ளனர்.
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்