மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் தற்கொலை
மொரப்பூர் அருகே உள்ள கருத்தாங்குளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி அகிலா (வயது 30). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அகிலா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அகிலாவின் தாயார் அல்லி மொரப்பூர் போலீசில் புகார் செய்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
அதில் தனது மகளிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சீர்வரிசை கேட்டு தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் திருமணமான 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை நடத்தி வருகிறார்.