தர்மபுரியில் கோர்ட்டு பெண் ஊழியர் தற்கொலை
தர்மபுரியில் கோர்ட்டு பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
சேலத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 29,) திருமணமாகாத இவர் தர்மபுரி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். தர்மபுரி கமலா லட்சுமி காலனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் ராஜலட்சுமி தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று அவர் தங்கியிருந்த விடுதி அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விடுதி அறையை உடைத்து பார்த்தபோது ராஜலட்சுமி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோர்ட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.