2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளத்தை சேர்ந்தவர் இசக்கிநாதன் என்ற ராஜ் (வயது 21). நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் இசக்கி சுப்பையாதாஸ் (23). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 26-ந்தேதி செய்துங்கநல்லூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள். இதில் இசக்கிநாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் சேரகுளம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் 2 பேரும் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
இதனால் இசக்கிநாதன், இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கலெக்டரிடம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று இசக்கிநாதன், இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை செய்துங்கநல்லூர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.