பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அனுமதி பெற்று தருவதாக ரூ.1¼ கோடி மோசடி திண்டுக்கல் பெண் சாமியார் மீது மேலும் ஒரு வழக்கு
பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக திண்டுக்கல் பெண் சாமியார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் பபிதா என்ற பவித்ரா (வயது 41). இவர் தன்னை காளி பக்தை என்றும், சாமியார் என்றும் கூறி வந்தார். அதோடு திண்டுக்கல் மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பலருக்கு ஆசி வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பையை சேர்ந்தவர் தவயோகி ஞானதேவபாரதி. இவர் நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரிடம் ஆசிரமத்துக்கு நிலம் வாங்கி தருவதாக ரூ.5¼ லட்சம் மோசடி செய்ததாக கடந்த சில நாட்களுக்கு நிலக்கோட்டை போலீசார் பவித்ராவை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தங்கை ரூபாவதியும் கைது செய்யப்பட்டார். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி பவித்ராவின் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் ஒரு மோசடி
இதற்கிடையே தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 57). இவர் அங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்பினார். அதன்படி மேலும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்க முடிவு செய்தார். இதையடுத்து அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நண்பர் ஒருவரின் மூலம் பெண் சாமியார் பவித்ரா, அவருடைய தங்கை ரூபாவதி, உசேன்பாவா ஆகியோர் சூரியமூர்த்திக்கு அறிமுகம் ஆகினர். அப்போது தனக்கு பலரிடம் செல்வாக்கு இருப்பதாக பவித்ரா கூறியிருக்கிறார். அதன்மூலம் குறைந்த செலவில் எளிதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி பெற்று தருவதாக தெரிவித்து இருக்கிறார்.
ரூ.1¼ கோடி
அதை உண்மை என நம்பிய சூரியமூர்த்தி பல்வேறு தவணைகளாக, பவித்ராவுக்கு பணம் கொடுத்து உள்ளார். அந்த வகையில் ரூ.1 கோடியே 33 லட்சம் வரை அவர் கொடுத்து இருக்கிறார். ஆனால் பேசியபடி பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி பெற்று தரவில்லை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சூரியமூர்த்தி புகார் செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மோசடி செய்ததாக பவித்ரா, ரூபாவதி, உசேன்பாவா ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் பவித்ரா, அவருடைய தங்கை சிறையில் இருக்கும் நிலையில் மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவர் வேறு யாரிடமாவது மோசடி செய்து இருக்கிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.