கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது
தொழில் நகரான திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. முந்தையநாளை விட நேற்று ஒரே நாளில் கூடுதலாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்
தொழில் நகரான திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. முந்தையநாளை விட நேற்று ஒரே நாளில் கூடுதலாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
226 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 100-ஐ தாண்டி 127 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று திடீரென பாதிப்பு அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரேநாளில் 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நகரான திருப்பூரில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1 லட்சத்தை நெருங்குகிறது
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 724 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,028 ஆக உள்ளது.
200-ஐ தாண்டிய பாதிப்பு
இதுவரை தினசரி சராசரியாக 80 என இருந்த நிலையில் நேற்று முன்தினம் 1000-ஐ தாண்டியது. இந்தநிலையில் நேற்று ஒரே அடியாக 200-ஐ தாண்டிவிட்டது. 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் பரவல் மேலும் அதிகரிக்கும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு வர வேண்டும் என்றும், ஊரடங்கை மதித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.