அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பூட்டப்பட்டால் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் நடை பூட்டப்பட்டால் பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பூக்கள் விற்பனையாகாமல் மாலைகள் கடைகளில் தொங்குகிறது.

Update: 2022-01-08 15:06 GMT
அவினாசி
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் நடை பூட்டப்பட்டால் பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பூக்கள் விற்பனையாகாமல் மாலைகள் கடைகளில் தொங்குகிறது.
கோவில்
 அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்தது என்ற சிறப்பு பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 1-ந்தேதி முதல் தை மாதம்  1-ந் தேதி வரை தினமும் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் அதிகாலை நேரத்தில் சிறப்புவழிபாடுகள் நடைபெற்று வந்தது. 
 அவினாசிலிங்கேசுவார் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், காசி விநாயகர்கோவில்களில்  மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் பூ, மாலைகள் வாங்கி சாமிக்கு அணிவித்து தரிசனம் செய்வார்கள். இதனால் பூக்கடைகளில் வியாபாரம் சக்கை போடு போடும். 
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான்  பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவிலில் சாமி கும்பிட பத்தர்களுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அனுமதில்லை. ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடந்தது. 
பூ வியாபாரம் பாதிப்பு 
சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் கோவில்களுக்கு பக்தர்கள் வரவில்லை. அப்படி வந்த பக்தர்களும் கோவில் நடை பூட்டப்பட்டிருந்ததால் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தால்தான் பூக்களை வாங்கி சாமிக்கு படைப்பார்கள். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பூக்கடைகளில் உள்ள பூக்கள் விற்பனையாமல் அப்படியே கிடக்கிறது. குறிப்பாக கோவில்களில் பூசைக்காக பயன்படுத்தும் அரளி, செவ்வந்தி, சென்பகம் | சம்பங்கி, நந்தியாவட்டை, தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களால் மாலைகள் மற்றும் சரம் கட்டி ஆகியவை பூக்கடைகளில் விற்பனையாமல் தொங்குகிறது.  

மேலும் செய்திகள்