ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

Update: 2022-01-08 14:07 GMT
குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அந்த இடத்தில் நேற்று மலர் வளையம் வைத்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் பொதுமக்கள் கூறும்போது, இந்த விபத்து எங்கள் வாழ்வில் மறக்க முடியாததாகிவிட்டது. அதில் ஒருவர் கூட உயிர் பிழைக்காததது வேதனையை தருகிறது. நாங்கள் எந்தவித உதவியையும் எதிர்பார்த்து மீட்பு பணியில் ஈடுபடவில்லை. மனிதாபிமான முறையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றோம் என்றனர்.

மேலும் செய்திகள்