பழனிக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை
பழனிக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் அதிகளவில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனிக்கு வரும் பக்தர்களிடம் அடிவாரம், பஸ்நிலைய பகுதியில் நிற்கும் திருநங்கைகள் வழிமறித்து பணம் வாங்குகின்றனர். இதில் ஒருசில திருநங்கைகள் பக்தர்களின் பையில் இருந்து பணத்தை பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதை தட்டிகேட்கும் பக்தர்களை அவர்கள் திட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணத்தை பறிகொடுத்த பக்தர்கள் சிலர் பழனி போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், பழனிக்கு வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இவ்வாறு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட திருநங்கை மீது குண்டர் சட்டம் பாயும். திருநங்கைகள் சுயதொழில் செய்வதற்கு போலீஸ் துறை சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக பழனி வேல் ரவுண்டானா பகுதியில் முககவசம் அணியாமல் வந்த மக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு முககவசம் வழங்கினார். இதில் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.