கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-08 08:54 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (வயது 52). கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4-ந் தேதியன்று கொக்கு மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோல் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட காசிநாதபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்