3 மாதங்களுக்கு பிறகு `கிடுகிடு' உயர்வு: கொரோனா தொற்றால் ஒரே நாளில் 514 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர்,
கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100 மற்றும் 200 ஆக இருந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு அதிகபட்சமாக நேற்று கொரோனா தொற்றால் 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 452 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 1,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,866 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் ஒருவர் இறந்து உள்ளார்.