கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் பலி

கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

Update: 2022-01-07 22:57 GMT
பெங்களூரு:

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியில் பெங்களூரு-துமகூரு நைஸ் ரோட்டில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் பின்னால் வந்த லாரி ஒன்று அந்த கார் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய கார் பன்னரக்கட்டாவில் இருந்து துமகூரு நோக்கி சென்றது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் பெயர் விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை. 

இந்த விபத்தால் நைஸ் ரோட்டில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்