நெல்லை மாவட்டத்தில் இன்று 577 இடங்களில் தடுப்பூசி முகாம்

இன்று 577 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

Update: 2022-01-07 22:28 GMT
நெல்லை:
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் 18-வது மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று 577 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத கல்லூரி மாணவர்கள் அவர்களது வீட்டுக்கு அருகில் நடத்தப்படும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வாய்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பான நிலையை அடைய வேண்டும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்