குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர்

Update: 2022-01-07 21:59 GMT
நெல்லை:
நெல்லை அருகே  கொங்கந்தான்பாறை புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவா் செல்லப்பா மகன் செல்வசங்கர் என்ற கொசுசங்கர் (வயது 21). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று செல்வசங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வசங்கரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்