பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-01-07 21:53 GMT
களக்காடு:
களக்காடு அருகே வடக்கு மீனவன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி. விவசாயி. இவருடைய மகள் லட்சுமி (வயது 24). பி.பி.ஏ. பட்டதாரியான இவர், வீட்டு வேலைகளை சரிவர செய்யவில்லை என்று கூறி பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்யுமாறு லட்சுமியிடம் கூறி விட்டு தாயார் வயலுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்