மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
இரணியல் அருகே தென்னந்தோப்பில் நின்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே தென்னந்தோப்பில் நின்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூதாட்டி
இரணியல் அருகே உள்ள பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் லாசர். இவருடைய மனைவி மரியம்மாள் (வயது76). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அந்த பகுதியில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் பேயன்குழியில் உள்ள தோப்பில் மரியம்மாள் நின்று கொண்டிருந்தார்.
5 பவுன் நகை பறிப்பு
அப்போது, ஒரு மர்ம நபர் அங்கு வந்தார். இதைகண்ட மரியம்மாள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பியோடி விட்டார்
பின்னர் இதுகுறித்து மரியம்மாள் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.