பெருந்துறையில் காரில் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
பெருந்துறையில் காரில் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.
பெருந்துறை
பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கருப்பசாமி ஆகியோர் ஈரோடு ரோடு ஆனைப்பாளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கருப்பு நிற கார் ஒன்று ரோட்டோரமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். உடனே போலீசார் அந்த காரில் சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண் மற்றும் 2 ஆண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ‘அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த தங்கேஸ்வர பெருமாள் (வயது 34), ஈரோடு அசோகபுரத்தை சேர்ந்த அருள்ராஜ் (29) என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராசிபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை காரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தங்கேஸ்வர பெருமாள், அருள்ராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.